கோலாலம்பூர், மே, 28-
நடப்பு அமைச்சரவை பொறுப்பிலிருந்து விலகுவதோடு, விடுமுறைக்காக விண்ணப்பத்திருந்த பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி, இயற்கைவளம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகிய இருவரின் கடிதங்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெற்றுக்கொண்டார்.
அவ்விருவரின் விடுமுறை விண்ணப்பங்களுக்கு, டத்தோ ஸ்ரீ அன்வார் அனுமதியளித்ததாக, பிரதமர்துறை அலுவலகம் புதன்கிழமை இரவில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ்விருவரின் பதவி விலகல் குறித்த மேலதிக முடிவுகள், பின்னர் பிரதமர் அறிவிப்பார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பி.கே.ஆர். கட்சித் தேர்தலில், தோல்விக் கண்டதை அடுத்து, ரபிஸியும் நிக் நஸ்மியும் தத்தம் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக முன்னதாக அறிவித்திருந்தனர்.

