கோலாலம்பூர், மே 30- அர்த்தஞான மையம், மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், இந்து இளைஞர் அமைப்பு மற்றும் இந்து சேவை சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்து இளைஞர்களுக்கான சமய விழிப்புணர்வு பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி பட்டறை வரும் ஜூன் 2ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 8.00 தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை தலைநகர், ஜாலான் பங்சார் ஸ்ரீ காசி விஸ்வநாதன் சுவாமி திருக்கோவிலில் நடைபெறவுள்ளது.
இந்து இளைஞர்களுக்கான இப்பயிலரங்கை அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள கவாய் ஆதீனத்தைச் சேர்ந்த யோகிநாதசுவாமி வழிநடத்துகிறார்.
இந்தப் பயிற்சி வகுப்பு 16 முதல் 22 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மட்டுமே.
ஆகவே இதற்குப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பதாரரின் பெயர், வயது, நகரம், தொலைபேசி எண் ஆகியவற்றை naalvar_team@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேல் விவரங்களுக்கு 012 302 5643 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

