அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான Mi-17 V5 ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த Mi-17 V5 ஹெலிகாப்டர் இன்று அதிகாலை 6 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

