கோலாலம்பூர், ஜூன் 11-

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நேற்று நடைபெற்ற 2027 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று எஃப் குழு ஆட்டத்தில், ஹரிமாவ் மலாயா தேசிய அணி, அதன் பரம வைரியான வியட்நாமை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்று மதிப்புமிக்க புள்ளிகளைப் பெற்றது.

அவ்வாட்டத்தில் மலேசிய அணியின் வலிமையை ஒப்புக்கொண்ட வியட்நாம் பயிற்றுநர் கிம் சாங்-சிக், இவ்வளவு பெரிய கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியடைவோம் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

இந்தத் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக கூறிய கிம் சாங்-சிக், அதிகமான வெளிநாட்டு விளையாட்டாளர்களைக் கொண்டுள்ள ஹரிமாவ் மலாயா அணியினர் மிகவும் வலுவாக இருந்ததாகவும், அது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை எனவும் அவ்வாட்டத்திற்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.