புதுடெல்லி, ஜூன் 12-

லண்டனுக்கு 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை மதியம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது.

அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மேகானி பகுதியில், மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இடத்தில் இருந்து கருப்பு புகை பெருமளவில் எழுவது, ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட அறிக்கைகளின்படி, விமானம் புறப்பட்ட உடனே அவசர நிலை ஏற்பட்டு, குடியிருப்பு பகுதியில் விழுந்தது, இதனால் உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்பு பணிகளுக்கு உதவ முன்வந்தனர்,

ஏழு தீயணைப்பு வாகனங்களும், பல மீட்பு குழுக்களும் தீயைக் கட்டுப்படுத்தவும், உயிர் பிழைத்தவர்களைத் தேடவும் அனுப்பப்பட்டன.

உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.