வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிணமாகக் கிடந்தனர்! கொலையா? தற்கொலையா?
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிணமாகக் கிடந்தனர்! கொலையா? தற்கொலையா?

ஸ்கூடாய், அக் 6-

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வீட்டிற்குள் பிணமாகக் கிடக்க காணப்பட்டனர். அதனை கண்ட அவரது உறவினர்கள் சோகக் கடலில் ஆழ்ந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் நேற்று பகல் 2.30 மணியளவில் ஸ்கூடாயில் உள்ள ரினி ரெசிடன், தாமான் முத்தியாரா ரினியில் நிகழ்ந்தது.

பூபாலன் த/பெ ரத்தினம் (வயது 53), இவருடைய மனைவி ஜெயா த/பெ பிச்சைமுத்து (வயது 46), இவர்களின் மகன் ஷர்வின் பூபாலன் (வயது 13), இவர்களின் மகள் கிரிஷா பிரித்தீனா (வயது 8) ஆகிய நால்வரும் வீட்டிற்குள் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் பூபாலன் 2 மாடிகள் கொண்ட வீட்டில் உள்ள படுக்கை அறையில் ஒரு துணியால் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அதே சமயம் இவருடைய மனைவி ஜெயா கீழ் மாடியில் உள்ள வரவேற்பு அறையில் ஒரு கட்டில் மீது பிணமாக கிடந்தார். இவர் நீண்ட காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர். இவருடைய உடலில் எந்த காயங்களும் இல்லை என்று இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் ஹசிம் முகமது தெரிவித்துள்ளார்.

இவர்களின் இரண்டு பிள்ளைகளும் இன்னொரு படுக்கை அறையில் அருகருகே பிணமாக கிடந்தனர். இவர்களின் கழுத்து பகுதியில் கயிற்றால் நெறிக்கப்பட்டதற்கான தடயம் இருந்தன என்று அவர் சொன்னார்.

தற்கொலை செய்துகொண்ட நபர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் கழுத்தை நெறித்து கொன்று இருக்கும் சாத்தியம் உள்ளது கூறப்படுகின்றது. இதனை போலீஸ் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன