குஜராத், ஜூன் 13-
சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தைத் தவறவிட்ட பூமி சாவ்ஹான் அந்த நிமிடங்களுக்காகத் தான் இறைவனுக்கு நன்றி கடன்பட்டிருப்பதாக மனமுருகக் கூறுகிறார்.
பூமி சாவ்ஹான் தனது கணவரோடு லண்டனில் வசித்து வருகிறார். விடுமுறைக்காக இந்தியா வந்த இவர் விடுமுறையை முடித்துக் கொண்டுநேற்று ஏர் இந்தியா விமானம் மூலம் லண்டன் திரும்பத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் பயணம் 10 நிமிடங்கள் தாமதமானது. இதனால் அவர் விமானத்தைத் தவறவிட நேர்ந்தது.
இந்த ஏமாற்றத்தில் மனம் நொந்துபோன பூமி சவுகானுக்கு விமானம் விபத்துக்குள்ளான செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நெஞ்சை உலுக்கும் அந்தக் கோர விபத்தை தன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்றும் பயண தாமதத்தால் தனது உயிரைக் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மனமுருகி னார்.
குஜராத், அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகலில் 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.