புத்ரா ஜெயா, ஜூன் 16- கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சியுற்ற 67.3 விழுக்காட்டு மாணவர்களுக்குப் பொதுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்விக் கூடங்களில் இடம் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வியமைச்சின் யுபியு இணைய தளத்தின் மூலம் உயர்கல்விக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களில் 150,557 பேருக்கு மேற்கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில் 86,589 மாணவர்களுக்கு பல்கலைக்கழங்களிலும் 42,058 மாணவர்களுக்கு போலி டெக்னிக்குகளிலும் 20,427 மாணவர்களுக்கு சமூகக் கல்லூரிகளிலும் 1,483 மாணவர்களுக்கு மாரா உயர்கல்விக் கழகங்களிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

