புத்ரா ஜெயா, ஜூன் 19-
மலேசிய மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் இடையிலேயே விலகுவது பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது.
மேலும், எஸ்பிஎம் மாணவர்களில் ஆயிரக்கணக்கானோர் அத்தேர்வினை எழுத வராததும் அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்துவதாகக் கல்வியமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினையைக் களைய 17 வயது வரையிலும் மாணவர்கள் கட்டாயக் கல்வியைப் பெறும் வகையில் சட்ட மசோதா அடுத்த மாதம் கூடவிருக்கும் நாடாளுமன்ற அவையில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

