கிள்ளான், அக். 7-

குறைந்த வருமானம் பெறுகின்றவர்கள் தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் (ஐஜேஎன்) சிகிச்சை பெறுவதற்கான செலவை ஈடுகட்ட அதன் அறவாரியத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 45 லட்சம் வெள்ளி தேவைப்படுவதாக அந்த அறவாரியத்தின் தலைவர் தோ புவான் டாக்டர் அய்ஷா ஒங் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்தாண்டு மட்டுமே வசதி குறைந்த நோயாளிகள் 157 பேருக்கு மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கு 40 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டது. இதில் பெரியவர்கள் 80 பேர், சிறார்கள் 77 பேரும் அடங்குவர் என செய்தியாளர்களிடம் அய்ஷா ஒங் கூறினார். இதில் வசதி குறைந்த நோயாளிகளுக்கான மருத்துவச் செலவுகளை ஈடுகட்டுவது மட்டுமின்றி ஐஜேஎன்னில் மருத்துவ நிபுணர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கும் இந்த அறவாரியம் நிதியுதவி செய்து வருகிறது.

இவ்வாறு ஆய்வுகள் பல செய்வதால்தான் இந்த வட்டாரத்தின் புகழ்பெற்ற இருதய சிகிச்சைக் கழகமாக ஐஜேஎன் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அய்ஷா ஒங் பெருமிதம் தெரிவித்தார்.