புத்ரா ஜெயா, ஜூன் 25-அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ரபிஸி ரம்லி, தாம் திட்டமிட்ட கல்வி சீர்திருத்தங்களை அமைச்சு மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அவரின் கூற்றை கல்வியமைச்சர் ஃபட்லினா சீடேக் மறுத்ததோடு ஒவ்வோர் உருமாற்றத் திட்டமும் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு முழுமையாக விவாதிக்கப்பட்டு மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அதில் எந்தவொரு திட்டமும் விடுபட்டதில்லை என்றும் அதனை ரபிஸி கவனத்தில் கொள்ளாது குற்றம் சாட்டுவது முறையல்ல என்றும் கடிந்து கொண்டுள்ளார்.
ரபிஸி தேவையற்ற குறைகூறலைக் கூறி கல்வியமைச்சுக்கு அவப்பெயரை கொண்டுவருவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் ஃபட்லினா கேட்டுக் கொண்டார்.
(பொன் முனியாண்டி)

