இசைஞானிக்கு கௌரவ பேராசிரியர் விருது!

0
17

கோலாலம்பூர், அக்.7-

தற்போது தலைநகரிலுள்ள புக்கிட் ஜாலில் அக்சியாத்தா அரேனா அரங்கில் நடைபெற்றுவரும் இசைஞானி இளையராஜாவின் ராஜா தெ ஓன் மேன் ஷோ நிகழ்ச்சியில் அவருக்கு கௌரவ பேராசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இசைஞானிக்கு இந்த விருதை ஆசியா மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் இயக்குநர் டான்ஸ்ரீ பாலன் வழங்கினார்.

இந்த பல்கலைக்கழகத்தில்தான் இசைஞானி இளையராஜாவின் இசை கல்வி பயிற்சி மலேசிய மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திடப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சியில் ஆசியா மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகத்தில் பயிலவிருக்கும் ஒரு மாணவரின் உயர்கல்விக்கு இசைஞானி இளையராஜா உபகாரசம்பளமாக 3 லட்சம் வெள்ளியை வழங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்னராக இசைஞானிக்கு டான்ஸ்ரீ பாலன் மாலை அணிவித்து சிறப்பு செய்தார். இந்நிகழ்ச்சியில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு கட்டமைப்பு தூதர் துன் டாக்டர் சாமிவேலு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் உள்பட முக்கிய பிரமுகர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.