ஆர்லாண்டோ, ஜூலை 1-
கிளப் உலகக் கிண்ண போட்டியில் இங்கிலாந்தின் மென்செஸ்டர் சிட்டி, சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணியிடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
இன்று நடைபெற்ற அவ்வாட்டம், அப்போட்டியில் இதுவரை நடந்த ஆட்டங்களிலேயே மிகவும் பரபரப்பான ஆட்டமாக அமைந்தது.
112-வது நிமிடத்தில் மார்கோஸ் லியோனார்டோ அடித்த கோல், அல் ஹிலாலுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. இந்தப் போட்டியில் அவர் இரண்டு கோல்களை அடித்தார்.
இன்றைய வெற்றியைத் தொடர்ந்து, அல் ஹிலால் அணி அடுத்து காலிறுதியில் பிரேசிலின் புளூமினென்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.