மியாமி, ஜூலை 2-
கிளப் உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் ஃபிளே ஓஃப் ஆட்டத்தில், ஸ்பெய்ன் அணியான ரியல் மாட்ரிட், இத்தாலியின் யுவென்ட்டஸை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
இளம் அகாடமி வீரர் கோன்சலோ கார்சியா, ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் அடித்த கோல் வெற்றிக்கு வழிவகுத்தது.
இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் நட்சத்திர தாக்குதல் வீரர் கைலியன் எம்பாப்பே, ஓய்வுக்கு பிறகு, தனது முதல் தோற்றத்தைப் பதிவு செய்தது ரியல் மாட்ரிட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
வயிற்றுப்போக்கு காரணமாக குழு நிலையில் கடைசி சில ஆட்டங்களில் விளையாடாத எம்பாப்பேவுக்கு பதிலாக களமிறங்கிய கார்சியா, இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் அபாரமாக கோல் அடித்து ரியல் மாட்ரிட் அணியை முன்னிலை பெறச் செய்தார்.
இந்த வெற்றியால், ரியல் மாட்ரிட் அடுத்த சுற்றில் போருசியா டார்ட்மண்ட் அல்லது மான்டெர்ரே அணியை எதிர்கொள்ளவுள்ளது.