எம்ஆர்டி திட்டத்தை அரசியல் திட்டமாக்குவதா?

காஜாங், ஜூலை 18-

சுங்கை பூலோ- காஜாங் எம்ஆர்டி ரயில் சேவை தொடக்கிவைக்கப்பட்ட நிகழ்வை அம்னோ அதன் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்ள முயன்றிருக்கிறது என சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி குற்றஞ்சாட்டினார்.  எம்ஆர்டி திட்டத்தை அம்னோ அதன் சொந்தத் திட்டம்போல் காண்பித்துக்கொள்ள முயன்றதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது, என அஸ்மின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

அரசாங்கத் திட்டங்களை அரசியல் திட்டங்களாக மாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது, என்றாரவர்.  நேற்று, சுங்கை பூலோ – காஜாங் இடையிலான இரண்டாம் கட்ட எம்ஆர்டி சேவையின் தொடக்கவிழாவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அமைச்சர்களும் கலந்துகொண்டார்கள். அதைத் தொடக்கிவைத்த பிரதமர் ஆகஸ்ட் 31வரை பயணிகள் பாதிக்கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்றார்.

மெர்டேக்கா கொண்டாட்டங்களை ஒட்டி வழங்கப்படும் இந்தக் கட்டணச் சலுகை எம்ஆர்டி சேவைக்கு மட்டுமல்லாமல் எல்ஆர்டி. மொனோரயில் சேவைகளுக்கும் வழங்கப்படுகிறது.