ரியோ டி ஜெனிரோ, ஜூலை 7-
உலக வர்த்தக அமைப்பின் (டபள்யூடிஓ) விரிவான சீர்திருத்தத்தை மலேசியா முழுமையாக ஆதரிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஙோஸி ஒகோன்ஜோ – இவெலாவுடனான சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் இவ்வாறு கூறினார்.
வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல் வர்த்தகம் முதலிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்த அமைப்பு சீரமைக்கப்படுவது அவசியம் என்றார் அன்வார்.
அதே வேளையில், இந்தச் சீர்த்திருத்த நடவடிக்கைகள் உலக நாடுகளின் கொள்கைக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்காமல் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
நைஜீரிய பொருளாதார நிபுணரான டாக்டர் ஙோஸி ஒகோன்ஜோ – இவெலா கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டபள்யூடிஓ இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.
இத்தகைய உயர் பதவி வகிக்கும் முதல் பெண்மணியாகவும் முதல் ஆப்பிரிக்கராகவும் இவர் திகழ்கிறார்.

