கோலாலம்பூர், ஜூலை 7-

நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் நாட்டின் உயர்வுக்கு இன்னுயிரையும் ஈந்த இந்திய சமூகத்தின் நிலை எதிர்பார்த்த அளவில் உயர்வை அடையவில்லை என்பது நாட்டிற்கு ஓர் அவமானம் என்று கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சார்லஸ் சந்தியாகோ தமது விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதற்கு முன் இந்திய அரசியல் தலைவர்கள் சமூகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டத்தை வரைந்து செயல்படுத்த வில்லை என்பதோடு அரசும் இதில் பெரிதும் அக்கறை காட்டாமல் அலட்சிய போக்கோடு நடந்து கொண்டதால், இந்திய சமூகம் மற்ற சமூகங்களோடு போட்டியிட முடியாமல் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருப்பது பரிதாபத்துக்குரிய ஒன்று என சார்ல்ஸ் குறிப்பிட்டார்.

13ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமூகத்தின் உயர்வுக்கு 40 அம்சங்களை பல்வேறு இந்திய சமூக அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்பு, அரசிடன் சமர்ப்பித்துள்ளதாகவும் இவற்றை அடிப்படையாக வைத்து அரசு இந்திய சமூகத்தின் உயர்வுக்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

-பொன் முனியாண்டி