வாஷிங்டன், ஜூலை 8-
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த நாடுகளுக்கான வரி விதிப்பில் எந்த விலக்கும் அளிக்கப்படமாட்டாது என்று டிரம்ப் தெரிவித்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் முதல் உச்சநிலை மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இடம் பெற்றன.
தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது.
கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் உறுப்பினர்களாக இணைந்தன.
இந்த அமைப்பில் இணைவதற்கான மலேசியாவின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.

