புத்ராஜெயா, ஜூலை 8-
மலேசியா மீது அமெரிக்கா விதித்திருக்கும் 25 விழுக்காடு இறக்குமதி வரி குறித்து அமைச்சரவையில் நாளை விவாதிக்கப்படும் என்று தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி கூறினார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் இது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து நாளை அமைச்சரவையில் விவாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது என்று ஜொஹாரி சுட்டிக் காட்டினார்.
அமெரிக்கா மலேசியா மீது கூடுதல் இறக்குமதி வரியை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவாக இருப்பதாகவும் ஜொஹாரி கூறினார்.
இவ்விவகாரம் மீது அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமெரிக்கா ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை வரி விலக்கு வழங்கியது.
அதே சமயம், அந்த வல்லரசு நாடு மலேசியாவிற்கு 24 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக வரியை உயர்த்தியுள்ளது.

