தமிழ் நாட்டில் அதிகம் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் சினிமாத் துறைக்கு பெரும் பாதிப்பாக உருவெடுத்துள்ளது புதிய வரித்திட்டம். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி தியேட்டர் ஊழியர்கள் சிலர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தியேட்டர்களில் புதிய படங்களை வெளியிடமாட்டோம் என தயாரிப்பாளர் சங்கமும் தடாலடி அறிவிப்பைச் செய்தது அறிவித்தது.

கேளிக்கை வரி விதிப்பால் அரசுக்கு எதிராகப் பொங்கும் திரைத்துறையினரையும், திரையரங்க உரிமையாளர்களையும் சமாதானம் செய்யும் பொருட்டு, தமிழக அரசு, டிக்கெட் விலையை 25% அதிகரித்துக்கொள்ள தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

அரசின் இந்த முடிவு தமிழ் சினிமாவை நசுக்கும் நடவடிக்கை என்று தொடர்ந்து சினிமா பிரபலங்கள் டிவிட்டர் பக்கத்தில் தங்களின் அதிருப்தையை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இதில், தியேட்டர் கட்டண உயர்வால் சினிமா நடுத்தர மக்களுக்கு எட்டா கனியாகிவிட்டது என்று. இதனால் மக்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் நிலை குறைவதால் சினிமா உற்பத்தி பாதிக்கபடுவதாக தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி கூறிருக்கின்றார். அரசு இதனைக் கருத்தில் மேற்கொண்டு இதில் சிறந்த முடிவை கையாள வேண்டும் என்று தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து, பேசி இருக்கும் நடிகர் பிரசன்னா தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கும் அதேவேளையில், சில முன்னணி நடிகர்களையும் லேசாக சாடியுள்ளார். இந்த பிரச்சனையை எந்த பெரிய படங்களைச் சேர்ந்தவர்களும் பேசப்போவதில்லை காரணம் அவர்களின் படங்கள் எப்படியும் ஓடிவிடும். இதனை தெரிந்த அவர்கள்தான் முதலில் வாய் திறந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை யாருமே ஒன்றும் பேசவில்லை . ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சின்ன பட்ஜெட் படத்தாரர்கள்தான்.

10 வருடங்கள் கழித்து இந்த விலையேற்றம் என்று நியாயப்படுத்தினாலும், இன்னும் பார்க்கிங், உணவு பண்டங்களின் விலையாவது நியயமாக குறைக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குதான் இல்லை. இது சினிமாத் துறை நிச்சயம் சாகடிக்கும் என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.