2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி – பிலே ஆப் சுற்றில் இத்தாலி!

0
4

ரோம், அக்.10 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கான பிலே ஆப் சுற்றுக்கு இத்தாலி தகுதி பெற்றுள்ளது. திங்கட்கிழமை நடந்த ஜி பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் இத்தாலி 1- 0 என்ற கோலில் அல்பேனியாவை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் வழி ஜி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள இத்தாலி , நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பிலே ஆப் சுற்றில் இத்தாலி தர வரிசை அணியாக இடம்பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

அல்பேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலியின் ஒரே கோலை அந்தோனியோ கான்ட்ரேவா 73 ஆவது நிமிடத்தில் போட்டார். 30 வயதுடைய கான்ட்ரேவா 50 ஆவது முறையாக இத்தாலி தேசிய கால்பந்து அணியில் களமிறங்குகிறார். பிலே ஆப் சுற்றுக்கான குலுக்கல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது