சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி வாய்ப்பை இழந்தது வேல்ஸ்!
விளையாட்டு

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி வாய்ப்பை இழந்தது வேல்ஸ்!

கார்டிப், அக்.10 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை வேல்ஸ் இழந்துள்ளது. 2016 ஈரோ கிண்ண கால்பந்துப் போட்டியில் அரையிறுதி சுற்று வரை தகுதி பெற்று அதிரடி படைத்த வேல்ஸ் இம்முறை உலகக் கிண்ண தகுதி சுற்றிலும் அதிரடி படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் திங்கட்கிழமை நடந்த டி பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் வேல்ஸ் 0 – 1 என்ற கோலில் அயர்லாந்து குடியரசிடம் தோல்வி கண்டது. இந்த வெற்றியை அடுத்து பிலே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை அயர்லாந்து குடியரசு பெற்றுள்ளது.

57 ஆவது நிமிடத்தில் ஜேம்ஸ் மெக்லேன் போட்ட கோல், வேல்ஸ் அணிக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆக கடைசியாக 1958 ஆம் ஆண்டில் வேல்ஸ் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடியது. கடந்த 59 ஆண்டுகளில் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் விளையாடும் எண்ணம் ஈடேறவில்லை.

இதனிடையே அயர்லாந்து, 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் விளையாடியது. தற்போது பிலே ஆப் சுற்றின் வழி மீண்டும் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட அயர்லாந்து திட்டமிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன