சென்னை ஜூலை 18-

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் மூத்த மகனும், திரைப்பட நடிகருமான மு.க.முத்து உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 77.

கருணாநிதி – பத்மாவதி தம்பதியினரின் மகனான மு.க.முத்து, ‘பூக்காரி’, ‘சமையல்காரன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அரசியலில் இருந்து விலகிய அவர், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இன்று காலை 8 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி உறுதிப்படுத்தியுள்ளார். மு.க.முத்துவின் மறைவு திரையுலகிலும், அரசியல் வட்டாரங்களிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.