கோலாலம்பூர், ஜூலை 31-
துன் உசேன் ஓன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சொற்போர்க் கழக மாணவர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர் அ. இரெங்கசாமி அவர்களின் நினைவாக, தமிழும் கதையும் எனும் தலைப்பில் தேசிய அளவிலான ஒரு சிறுகதைப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.
வயது வரம்பின்றி, அனைவரும் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
சிறுகதையின் வகையமைப்பில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை, ஆனால் கதையின் மையம் தமிழில் இருக்க வேண்டும்.
இச்சிறுகதைப் போட்டியின் முதல் பரிசாக 1,000 ரிங்கிட் ரொக்கமும் எழுத்தாளர் அ.இரெங்கசாமி அவர்களின் நினைவாகச் சுழற்கிண்ணமும் வழங்கப்படும் என்றும் இரண்டாம் பரிசாக 750 ரிங்கிட் ரொக்கமும், மூன்றாம் பரிசாக 500 ரிங்கிட் ரொக்கமும் நான்காம் நிலை முதல் இருபதாம் நிலை வெற்றியாளர்களுக்குத் தலா 100 ரிங்கிட் ரொக்கமும் வழங்கப்படும் என்று தமிழும் கதையும் சிறுகதை எழுதும் போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் துணைத் தலைவர் கிஷன் ராவ் சுப்ரமணியம் தெரிவித்தார்.
வெற்றியாளர்களின் சிறுகதைகள் ஒரு தொகுப்பாக நூலாக்கம் செய்யப்பட்டு, வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியிடப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் எழுத்தாளர்கள் தங்கள் சிறுகதைகளை 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஒரு போட்டியாளர் ஒரு சிறுகதையை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இணையத்தில், அச்சில் அல்லது ஏற்கனவே பிற போட்டிகளில் பங்கேற்ற கதைகள் அனுமதிக்கப்படமாட்டாது.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/1FXyAyJGmgKcamT3A இந்த இணைப்பில் தங்களைப் பதிவு செய்யலாம்.
போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் PDF மற்றும் Word வடிவங்களில் இருக்க வேண்டும். அவை Arial Unicode MS எழுத்துருவில், 12 அளவிலான எழுத்தில், வரியிடை 1.0 ஆக அமைந்திருத்தல் அவசியம். ஒவ்வொரு சிறுகதையையும் 400 சொற்களுக்குள் எழுதப்பட வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு கதையும் பங்கேற்பாளரின் சொந்த கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும்.
போட்டி தொடர்பான மேல் விவரங்களை அறிய கதிரவன் த/பெ சாஹாதேவனை (? 010-9162623) அல்லது கிஷன் ராவ் சுப்ரமணியத்தை (? 012-3701339) தொடர்பு கொள்ளலாம்.

