கோலாலம்பூர், ஆக.22-

சிகாம்புட் பெர்சத்து துணைத் தலைவர் அடாம் ரட்லான் முகமட் சம்பந்தப்பட்ட 5 ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மீட்டுக் கொண்டதற்கான காரணத்தை விளக்க வேண்டுமென சி4 எனும் அணுக்கமானவர்களுக்கு சலுகை காட்டுவதை எதிர்க்கும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அந்த வழக்குகள் சம்பந்தமாக அடாம் ரட்லான் நீதிமன்றத்திற்கு வெளியே 4.1 மில்லியன் ரிங்கிட்டை அபராதத் தொகையாகச் செலுத்தியதை அடுத்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் மீட்டுக் கொள்ளப்பட்டது சந்தேகத்தை எழுப்புவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அம்லா சட்டத்தின்படி அப்படி செய்ய சட்டம் இடம் தந்திருந்தாலும், அட்லான் மீது சுமத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொள்ள அனுமதியில்லை என்றும் சி4 அமைப்பு சுட்டுக்காட்டியுள்ளது.

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின்போது, ஜானா விபாவா பூமிபுத்ரா ஊக்குவிப்பு நிதியிலிருந்து 9.9 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-பொன் முனியாண்டி