கோலாலம்பூர்:

பாஸ் கட்சி ஒருபோதும் இந்தியர்களை ஓரங்கட்டியதில்லை என்று செமினி சட்டமன்றத்தின் இந்தியர்களுக்கான சிறப்பு அதிகாரி பூபாலன் கூறினார்.

இந்தியர்கள், சீனர்கள் உட்பட அனைத்து இன மக்களின் உணர்வுகளை மதிப்பதோடு அவர்களின் தேவைகளைப் பாஸ் கட்சி அறிந்து செயல்படுபதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில இந்தியர்கள் பாஸ் குறித்து தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், அந்தக் கட்சி அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், முஸ்லிம் அல்லாத மக்களுக்காக DHPP எனப்படும் பாஸ் ஆதரவாளர் சபை மூலமாக சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

அடுத்த தேர்தலில் தேசிய கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்ற தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இன்று (நவம்பர் 4) ஜாலான் ஈப்போவில் உள்ள மெட்ராஸ் கேஃவேவில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான தீபாவளி மதிய உணவு நிகழ்ச்சியில் பூபாலன் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில பாஸ் கட்சியின் துணை ஆணையர் 1, துணை ஆணையர் 2 துவான் ஜஜி சப்ரின் மர்சோனோ, ஹுலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் ஹஸ்னிசான் ஹாருன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.