சிகாமாட்:

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் உட்புறப் பகுதிகளில் மக்களின் தேவைகளை நேரில் சென்று கண்டறிந்ததோடு அவர்களின் நலனுக்காக நிதி உதவிகளை வழங்கினார்.

முதலில் கம்போங் மென்சூடுட் பிண்டாவிற்கு சென்று அந்தக் குடியிருப்பு பகுதியின் தலைவர் அப்துல் ரசாக் அஹமத் தலைமையிலான JPKK எனப்படும் கிராமப்புற மேம்பாடு மற்றும் பாதுகாப்பு செயற்குழுவிடம் RM15,000 மதிப்பிலான மாதிரி காசோலையை யுனேஸ்வரன் வழங்கினார்.

மழை காலத்தில் படகுகள் போதிய அளவில் இல்லாததால் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்நிதி மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் “fibre boat” மற்றும் படகு இயந்திரம் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று யுனேஸ்வரன் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, கம்போங் லூபோக் கெப்போங் பகுதியின், கம்போங் செயலாளர் முஹமத் அஸ்ருல் ஹசனிடம் பெர்டானா கூட்டுப்பணிம்திட்டத்திற்காக RM10,000 மதிப்பிலான நிதி உதவியை யுனேஸ்வரன் வழங்கினார்.

மேலும், கம்போங்கின் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் சிகாமாட் நாடாளுமன்றத்தின் மொத்த முன்னேற்றம் குறித்து யுனேஸ்வரன் கலந்துரையாடினார்.

அதன் பின்னர், கம்போங் அவாட் பகுதிக்கு வருகை மேற்கொண்ட யுனேஸ்வரன் கம்போங் தலைவர் முஹம்மத் பாரிடோல் காமிஸ் தலைமையிலான JPKK செயற்குழுவிடம், RM20,000 மதிப்பிலான மதிப்பிலான மாதிரி காசோலையை வழங்கினார்.

இந்த நிதி, கம்போங்கிலுள்ள “Jalan Kebun Hijau” சாலை மேம்பாடு மற்றும் culvert “U” அமைக்கும் பணிக்காக பயன்படுத்தப்படும்.

அரசியல் பின்புலம் வேறுபட்டாலும், மக்களின் நலனே தனது முன்னுரிமை என்று யுனேஸ்வரன் கூறினார்.

கம்போங் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மடானி அரசு எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என்று யுனேஸ்வரன் தெரிவித்தார்.