கோலாலம்பூர்:

“கவியரசு கண்ணதாசன் மனித உணர்வுகளைச் செவ்வனே வெளிப்படுத்தியவர். அவரின் பாடல்கள் தலைமுறைகளைத் தொட்டுப் பேசுகின்றன என்று டத்தோ கீதாஞ்சலி ஜீ, டிஎஸ்ஜி கிரியேஷன் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி, தெரிவித்தார்.

நவம்பர் 9-ஆம் தேதி தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற “தமிழ் திருவிழா கண்ணதாசனைப் போற்றுவோம்” என்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர் இதனை கூறினார்.

மேலும், இன்றைய தலைமுறைக்கும் அவர் சொல்லிய உண்மைகள் வழிகாட்டியாக நிற்கின்றன என்றார் அவர்.

இந்த விழா வழக்கறிஞர் பாண்டிதுரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இவ்விழாவில், கண்ணதாசனின் பாடல்களுக்கு இசை நிகழ்ச்சி, நாட்டியம், உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் அரங்கேறின.

இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திய வழக்கறிஞர் பாண்டிதுரை மற்றும் குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.