கோலாலம்பூர், நவ. 13-

ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் ஒளிபரப்பாகும் பாட்காஸ்ட் வித் விகடகவி-இன் புதிய அத்தியாயங்களை டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா வழியாக ரசிகர்கள் கண்டு மகிழலாம்.

இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கண்டு களிக்கும் வசதியை வழங்க டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா உள்ளிட்டப் பல தளங்களில் கிடைக்கப்பெறும்.

இந்த அற்புதமான புதிய தொடர் அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும்  இன்றைய துடிப்பான தலைமுறைக்கு ஏற்ற நுண்ணறிவுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்நாட்டு இயக்குநர், ராணி சுந்தரராஜூ கைவண்ணத்தில் மலர்ந்த, பிரபல நடிகர், தொகுப்பாளர் மற்றும் அறிவிப்பாளர் விகடகவி மகேன் தொகுத்து வழங்கும் 11 அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர், டாக்டர் பானி, பால கணபதி வில்லியம், தாஷா, சகுந்தலா கணேசன், அருள் செல்வன், லிங்கேஸ், மாலினி ராமா, விக்கி (ராகா), டாக்டர் மணி, சசிதரன் கே ராஜூ மற்றும் டாக்டர் மஹா உள்ளிட்ட கலைஞர்களின் வரிசையைக் கொண்டுள்ளது.

இந்தச் சிந்தனையாளர்களும் ஆளுமைகளும் சமூகப் பிரச்சினைகள், சமூகம் சார்ந்த உரையாடல்கள், கலாச்சாரக் கட்டுக்கதைகள், வணிகக் கருத்துக்கள், உறவுகள், பணியிட இயக்கவியல், மருத்துவ நுண்ணறிவுகள் போன்ற சிந்தனையைத் தூண்டும் தலைப்புகளை இத்தொடர் முழுவதும் ஆழமாக ஆராய்வார்கள். மேலும், அர்த்தமுள்ள உரையாடலுடன் நிஜ வாழ்க்கை உதாரணங்கள் மற்றும் வழக்கு ஆய்வுகளை இந்த நிகழ்ச்சி உட்படுத்தியிருக்கும்.

ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99*-இலிருந்து கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99* கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.

 

மேல் விபரங்களுக்கு www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.