கோலாலம்பூர்:
2018ஆம் ஆண்டு ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவை வரி) ரத்து செய்யப்பட்டதிலிருந்து நிலுவையில் இருந்த திருப்பிச் செலுத்தும் கோரிக்கைகளில் பெரும்பாலானவைth தற்போது நிறைவு பெற்றுள்ளன என்று இரண்டாம் நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசீசான் உறுதிப்படுத்தினார்.
ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்ட வேளையில், திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 19 பில்லியன் ரிங்கிட் ஆக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
“அனைத்து கோரிக்கைகளும் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில காரணங்களால் சுமார் 30 மில்லியன் ரிங்கிட் அளவிலான கோரிக்கைகள் மட்டும் இன்னும் நிறைவு பெறவில்லை” என்று அவர் கூறினார்.

