கோலாலம்பூர்:
சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸம்ரி வினோத்,தமீம் டாஹ்ரி ஆகியோருக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தொடர போலிஸ் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அவ்விருவரும் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக போலிஸ் தலைவர் தான் ஸ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன, மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதற்காகவும், இந்துக்களின் புனிதச் சின்னமான திரிசூலத்தை அவமதித்ததற்காகவும் இவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இவர்களைக் கண்டுபிடிக்க தாய்லாந்து அதிகாரிகளின் தயவு நாடப்பட்டுள்ள வேளை, நாடு திரும்பியதும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றாரவர்.

