அலோர் ஸ்டார்:
அதிகச் செலவுகளைத் தவிர்க்கும் நோக்கில், மத்திய அமைச்சுகள், அரசு நிறுவனங்கள் சார்பில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்த வேண்டாம் என்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முடிவை கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி முகமட் நோர் ஆதரித்துள்ளார்.
இந்த சிக்கன நடவடிக்கையை வரவேற்ற சனுசி, மார்ச் 27-ஆம் தேதி கெடா மந்திரி பெசார் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ மெண்டலூனில் நடைபெறும் ஒரே ஒரு திறந்த இல்ல நிகழ்விற்கு அனைவரையும் அழைப்பதாகக் கூறினார்.
இந்த முடிவை வரவேற்ற சனுசி, தனது மாநிலத்தில் அரசு சாரா நிகழ்ச்சிகள் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கூட்டு முயற்சியின் மூலம் செலவுகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

