ஜொகூர் பாரு:
நேற்று புரூணையில் நடைபெற்ற ஆட்டத்தில் DPMM FC அணியை 3-0 என்ற கோல் கணக்கில் ஜொகூர் டாருல் தஃசிம் (ஜே.டி.தி) வீழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து 12-வது முறையாக மலேசிய சூப்பர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் ஆதிக்கத்தை செலுத்திவரும் ஜே.டி.தி, இன்னும் ஐந்து ஆட்டங்கள் மீதமுள்ள நிலையிலேயே கிண்ணத்தை மீண்டும் வென்றுள்ளது.

