கோலாலம்பூர்:
மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
கிள்ளானில் போதை ஆசாமியால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அக்கூற்றை முன்வைத்தார், மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமது ஃபைசால்.
தற்போதைய சட்டங்கள் போதிய அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது பிறரைத் திட்டமிட்டு கொலை செய்வதற்குச் சமம் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடுமையான சட்டத் திருத்தம் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

