கோலாலம்பூர்:
சிலாங்கூர், கிள்ளானில், மது மற்றும் போதைப்பொருளை உட்கொண்டு வாகனம் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிளோட்டி அமீருல் ஹபீஸ் ஒமார் பலியானார்.
அதனைத் தொடர்ந்து, மதுபோதை ஓட்டுநர்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மலேசியாவில் வலுத்து வருகின்றன.
பிரபல மத போதகர் உஸ்தாஸ் வாடி அன்வார், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு அல்லது தியாத் (Diyat – இரத்தப் பணம்) வழங்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார்.

