பெந்தோங்:
பகாங், பெந்தோங், தாமான் ஆர்கிட் பகுதியில் வசித்து வந்த 41 வயதான எம். ரேகா மற்றும் அவரது 5 பிள்ளைகள் (4–19 வயது) கடந்த திங்கட்கிழமை முதல் மாயமாகியுள்ளனர்.
காலை வீட்டில் இல்லாததை கவனித்த கணவர் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் போலீசில் புகார் அளித்தார்.
இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தையோ அல்லது 09-2231999 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

