சென்னை:
தமிழ்நாட்டில் ஏழாவது முறையாக திமுக அரசு அமைக்க வேண்டும் என்றும், திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை “தக்ஷிண பிரதேசம்” என மாற்றவும் தயங்கமாட்டார்கள் என ஸ்டாலின் எச்சரித்தார்.

