கோலாலம்பூர்:
ஆசியக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் வியட்நாமிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிஃபா (FIFA) அனைத்துலகத் தரவரிசையில் மலேசியா 138-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 135-வது இடத்தில் இருந்த ‘ஹரிமாவ் மலாயா’ அணி, தற்போது 1086.23 புள்ளிகளுடன் மேலும் மூன்று இடங்கள் சரிவைக் கண்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 121-வது இடத்தில் இருந்த தேசிய அணி, தற்போது வரை மொத்தம் 17 இடங்கள் பின்வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

