கோலாலம்பூர்:

சிலாங்கூர், கிள்ளானில் மதுபோதை மற்றும் போதைப்பொருள் ஓட்டுநரால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த அமிருல் ஹபீஸின் இரு மகன்களையும் மாரா (MARA) நிறுவனம் தனது கல்வி அறக்கட்டளையின் கீழ் தத்தெடுத்துள்ளது.

இம்மாணவர்களின் கல்விச் செலவிற்காகப் பள்ளிப் பருவம் முடியும் வரை மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும் என மாரா தலைவர் டத்தோ அஸ்ரப் வஜ்டி டூசுக்கி உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான நீண்டகால ஆதரவையும் கல்விப் பாதுகாப்பையும் மாரா நிறுவனம் தொடர்ந்து வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.