கோலசிலாங்கூர்:

சிலாங்கூர், கோலசிலாங்கூர், கம்போங் குவாந்தான் படகுத்துறையில் மீன்பிடிக்கச் சென்ற 63 வயது முதியவர் பி. ரவி சக்கர நாற்காலியுடன் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நண்பர்கள் பானம் வாங்கச் சென்ற நேரத்தில் ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

காணாமல் போன அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினர், இன்று காலை பத்து 7 1/2 படகுத்துறைஅருகே அவரது உடலை மீட்டனர்.