பெட்டாலிங் ஜெயா:

பெட்டாலிங் ஸ்ரீ சக்தி ஈஸ்வரி கோவில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக, ரிம 50,000 மதிப்பிலான போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக 65 வயது ஓய்வுபெற்ற அரசு அதிகாரி எம். திருச்செல்வம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் கோவில் தலைவர் பி. செல்வம் (70) ஆகியோர் மீது ஷா ஆலம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2021-இல் நடந்ததாகக் கூறப்படும் இந்த மோசடி வழக்கில் இருவரும் குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.