ஷா அலாம்:

எரிபொருள் நுகர்வைக் குறைக்க, ஏப்ரல் 15 முதல் அரசு ஊழியர்களுக்கு செவ்வாய் முதல் வியாழன் வரை வீட்டிலிருந்தே பணிபுரியும் (WFH) முறை அமல்படுத்தப்படுகிறது.

அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்புகளைக் கையாள சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

2026 மாநில வரவுசெலவுத் திட்டம் மறுசீரமைக்கப்பட்டு, மக்களின் வாழ்க்கைச் செலவு மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.