செகாமாட்:
ஜொகூர், செகாமட்டில் மூன்று உயிர்களைப் பலிவாங்கிய விபத்தை ஏற்படுத்திய 29 வயது லாரி ஓட்டுநர் மீது நாளை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்ட அந்த நபர் மீது, போக்குவரத்து சட்டத்திற்குப் பதிலாக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறை மற்றும் பிரம்படி வழங்கப்பட வாய்ப்புள்ளது.

