செகாமாட்:

ஜொகூர், செகாமட்டில் கடந்த வியாழக்கிழமை போதைப்பொருள் தாக்கத்துடன் ட்ரெய்லரை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 29 வயது ஓட்டுநர் மீது இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

முகமட் ஷாஃபிக் என்ற அந்த ஓட்டுநர், எஸ். பழனியாண்டி (77), கே. மாயகிருஷ்ணன் (72) மற்றும் எஸ். செவந்தை (62) ஆகியோருக்கு மரணம் விளைவித்ததாக செகாமட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகின்ற மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.