புந்தோங்:

பேராக், ஈப்போ, புந்தோங்கில் நேற்று இரவு நடந்த அரிவாள் ஏந்திய கும்பல் தாக்கியதில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் பலர் காயமடைந்தனர்.

வாடகை கார் நிறுவனம் ஒன்றில் இருந்தபோது மர்ம கும்பலால் தாக்கப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொலை மற்றும் கலவரம் எனப் பல கோணங்களில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடிய மற்ற சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.