கோலாலம்பூர்:
மலேசியாவில் எரிபொருள் விலை உயர்வுக்குப் போதிய காரணங்கள் இல்லை எனவும், இது நிர்வாகச் சீர்கேட்டால் ஏற்படும் ஏமாற்று வேலை என்றும் பாஸ் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் பெட்ரோலிய வளம் இருக்கும்போது, சர்வதேசச் சூழலைக் காரணம் காட்டி விலையை உயர்த்துவது மக்களை வஞ்சிக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலைநாட்டு நிதி நிறுவனங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து, இஸ்லாமிய ஒற்றுமையுடன் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பேணுமாறு அவர் முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.

