கோலாலம்பூர்:
கவனிப்பில் இருந்த 3 வயது சிறுமியைத் துன்புறுத்திய குற்றச்சாட்டை, ஒன்பது மாதக் கர்ப்பிணியான 28 வயது காப்பாளர் ஏ. சரண்யா மற்றும் அவரது தாய் பி. சரோஜா ஆகியோர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடந்த இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா ரிம 15,000 பிணை வழங்கப்பட்டு, மே 18-க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

