கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் போக்குவரத்து போலிஸை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக இன்ஸ்பெக்டர் முஹம்மது கமல் ராஜ் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
“எனக்கு செய்வினை செய்யப்பட்டுள்ளது, எதுவும் நினைவில்லை” என்று கூறிய அவர், ஏப்ரல் 10-ஆம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இக்குற்றத்திற்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

