மலாக்கா:
அம்னோவின் ‘ரூமா பங்சா’ முன்முயற்சியின் கீழ், கைரி ஜமாலுடின், டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் உசேன், டத்தோ சைட் ஹமீட் அல்பார் உள்ளிட்ட 6,252 முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க அம்னோ உச்சமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் அஷ்ரப் வாஜ்டி டுசுகி, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவை சமூக ஊடகங்கள் வாயிலாக உறுதிப்படுத்தினார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அம்னோவை மீண்டும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

