மலாக்கா:
வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் அம்னோ மற்றும் தேசிய முன்னணி (BN) தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
தொகுதிப் பங்கீட்டில் தேவையற்ற மோதல்களைத் தவிர்ப்பது குறித்து கட்சி தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும்,
சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூட்டணி குறித்து இன்னும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதையும் உறுதிப்படுத்தினார்.

